அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் அதிகம் உச்சரித்த பெயரே போய்வா! – வைரமுத்து
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து ட்விட்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சண்முகநாதனின் மறைவு குறித்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அண்ணனே! சண்முகநாதனே! போய்வா! அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் அதிகம் உச்சரித்த பெயரே போய்வா! கலைஞர் ஒலி நீ எழுத்து அறிவின் ஆதிக்கமே அன்பின் நீர்த்தேக்கமே போய்வா! கட்சி ஆட்சி குடும்பமென்னும் முக்கோணத்தின் முக்காலமறிந்த திரிஞானியே உழைப்பின் சத்தமில்லாத சரவெடியே ஓய்வெடு; போய்வா!’ என பதிவிட்டுள்ளார்.
அண்ணனே!
சண்முகநாதனே! போய்வா!அண்ணாவுக்குப் பிறகு கலைஞர்
அதிகம் உச்சரித்த பெயரே
போய்வா!கலைஞர் ஒலி
நீ எழுத்துஅறிவின் ஆதிக்கமே
அன்பின் நீர்த்தேக்கமே போய்வா!கட்சி ஆட்சி குடும்பமென்னும்
முக்கோணத்தின்
முக்காலமறிந்த திரிஞானியேஉழைப்பின்
சத்தமில்லாத சரவெடியே
ஓய்வெடு; போய்வா! pic.twitter.com/xirQ3da2MQ— வைரமுத்து (@Vairamuthu) December 21, 2021