பயம் புருத்தும் டிரம்ப் அசராத டிவிட்டர்.! எல்லா தவறுகளை சுட்டிக்காட்டுவோம்.!

Default Image

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார்.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தபால் ஒட்டுகளுக்கான விண்ணப்பங்களைய அனுப்பும் பணியில் கலிபோர்னியா மாகாண ஆளுநர் தொடங்கினார். இந்த தபால் வாக்குசீட்டுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். நம்பகத்தன்மை அற்றவை என டிவிட்டர் முத்திரையிட்டு, உண்மையான இணைப்பை இணைத்து.

இதனை மறுத்து ட்ரம்பின் பதிவு பொய்யானது என ஆதாரத்துடன் செய்தியாக அமெரிக்க பத்திரிக்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. பத்திரிக்கை செய்தியை மேற்கோள் காட்டி, ட்ரம்பின் டிவீட்கள் பொய்யானது என டிவிட்டர் பதிவிட்டிருந்தது. கோவப்பட்ட டிரம்ப், சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். சமூக ஊடக தளங்களுக்கு சரிபார்க்கப்படாத அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு ட்வீட்டர் சில மணி நேரத்தில் வன்முறையை மகிமைப்படுத்துவதாக முத்திரையிட்டுள்ளது.

இதனை பற்றி ட்ரம்ப் என்ன சொல்கிறார் என்றால் அமெரிக்க அரசியல் விசியத்தில் டிவிட்டர் தலையிட வேண்டாம். அதை நாங்கள் ஏற்க முடியாது இதற்கான நடவடிக்கை பெரிதாக இருக்கும் என கூறினார். இதற்கு பதிலளித்த டிவிட்டர் சி.இ.ஓ , டிவிட்டர் நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானவர் நான்தான். எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள். உலகெங்கும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவோம். எங்கள் தவறுகளை நாங்கள் ஒப்புக்கொள்வோம். என கூறியுள்ளார்.மேலும் பொய் சொல்லும் சீனாவையும், அமெரிக்க எதிர்க்கட்சிகளையும் ஒண்ணுமே செய்யாத டிவிட்டர் நிருவாகம்  ஆளுங்கட்சியையும், அதிபரையும் குறிவைக்கிறது எனவும் இதை சரிசெய்ய வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்