செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபட்டால் என்ன நம்மை தெரியுமா .?
செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபட்டால் கணவன் மனைவி இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோசமாக வாழலாம்.
வாரத்தில் கடவுளுக்கு மிகவும் துய்மையான பக்தி மிகுந்த கிழமை செவ்வாய்க்கிழமை என்று கூறலாம், இந்த நிலையில் இந்த செவ்வாய்கிழமை ஒவ்வொரு பகவானை வழிபட்டால் ஒவ்வொரு நன்மை கிடைக்கும் அந்த வகையில் தற்பொழுது செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபட்டால் என்ன நம்மை என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
நாம் நரசிம்ம கடவுளை தொடர்ந்து வணங்கி வந்தால் எந்த ஒரு தோஷமும் நம்மை நெருங்க முடியாது, நரசிம்மர்க்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூ மிகவும் பிடிக்கும், இதை வைத்து நரசிம்மரை வணங்கிவந்தால் அவருடைய அருள் நமக்கு விரைவில் கிடைக்கும்,
நன்மைகள்:
கணவன் மனைவி இடையே எப்பொழுதும் சண்டை வருகிறதா நம்ம நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வாருங்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோசமாக வாழலாம், மேலும் நரசிம்மர் ஜெயந்தி அன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால் மிகவும் நல்லது, நரசிம்மரின் அருளை பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டியது கட்டாயம், நரசிம்மரின் அருளை பெற விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் சார்ந்த உணவுகளை தொடவே கூடாது.
நரசிம்மரை செவ்வாய்க்கிழமை வழிபட்டால் உழைப்பில் வெற்றிகிடைக்கும், நம்மளுடைய ஏதிரிகள் கூட நமக்கு நண்பர்கள் ஆவார்கள், மேலும் நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வருவதால் எட்டு திசைகளிலும் புகழ் கிடைக்கும்,மேலும் வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று சூரியன் மறையும் நொடியில் நரசிம்மர் அவதரித்தார் இதுதான் நரசிம்மர் ஜெயந்தி அந்த நேரத்தில் வழிபடுவது மிகவும் அருமையாக இருக்கும் .
நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வருவதால் தீராத வினைகளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் கிரகங்கள் மற்றும் கடன் தொல்லைகள் தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து வணங்கி வந்தால் விரைவில் அணைத்து பிரச்சனைகளும் தீரும்.
மேலும் கடன் பிரச்சனைகள் இருப்பவர்கள் நரசிம்மருக்கு சொந்த செலவில் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வந்தால் கடன் தொல்லைகளிலிருந்து நீங்கலாம், குறிப்பாக சுவாதி நட்சத்திரத்தில் உள்ளவர்கள் நரசிம்மரின் கோவிலுக்கு சென்று பூஜையை தலைமையேற்று நடத்தினால் விரைவில் நீங்கள் கேட்ட நன்மை கொடுக்கும்.