வெற்றியை அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது.ஆனால் கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து கோத்தபய ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,அனைவரும் இலங்கையின் புதிய பயணத்தில் இணைந்து பயணிப்போம். தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…