ஷிவாங்கியை கூட தல ரசிகர்கள் விட்டு வைக்கல.!எங்க போனாலும் வலிமை அப்டேட்.!
தல ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர் .இதனை தல அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டிக்கவும் செய்தார் . இருப்பினும் தற்போது தல அஜித்தின் ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கியிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.
சமீபத்தில் ஷிவாங்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசி கொண்டிருந்த போது தல ரசிககர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போ என்று கேட்க அதற்கு ஷிவாங்கி எனக்கே தெரியாது, ஒருவேளை தெரிந்தால் நிச்சயமாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram