கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம, தேசிங்கு ராஜா, மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் இசையமைத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக டி.இமான் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த டி.இமான் மனைவி மற்றும் குழைந்தைகள் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது” விவாகரத்து என்பது மிகப்பெரிய விஷயம். விவாகரத்து என்றால் ஆண் மீதுதான் குற்றம் என மொத்தமாக குற்றம் சாட்டுகிறார்கள். தவறு யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம் அதை கோபமாகவும் பேசலாம் பேசாமலும் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருவர் மீது பழி போடக்கூடாது.
நானும் இப்படித்தான் நடக்க கூடாது என்று தன் விரும்பினேன் என்னுடைய குழந்தைகள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கக் கூடாது என நான் ஒரு அப்பாவாக நினைக்கிறேன். என் குழந்தைகள் மீது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும் என் உயிர் மூச்சு இருக்கும் வரை அது ஒரு நாளும் மாறாது என தெரிவித்துள்ளார். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் “என கூறியுள்ளார்.
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…