கொரோனா பரவாமல் இருக்க,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் லெமன்,புதினா சர்பத்..!
கொரோனா பரவாமல் இருக்க,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் லெமன்,புதினா சர்பத் செய்வது எப்படி?
கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை பருகுவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
அந்தவகையில்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,லெமன் புதினா சர்பத்தை எடுத்துக் கொள்ளவது சிறந்த தேர்வு ஆகும்.
செய்முறை:
- சுத்தமான தண்ணீர் – தேவையான அளவு
- புதினா இலைகள் – ஒரு கப்
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
- சீரகத்தூள்(வறுத்தது) – அரை ஸ்பூன்
- தேன் – மூன்று அல்லது நான்கு ஸ்பூன்
செய்முறை:
வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு சுத்தமான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன், புதினா இலைகள்,எலுமிச்சை சாறு,தேன்,வறுத்த சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் வைத்து நன்கு அரைக்க வேண்டும்.அதன்பின்,இதை டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்.
தேவைப்பட்டால்,இந்த சர்பத் பானத்தில் தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்தும் கொள்ளலாம்.இதனால்,பானத்திற்கு கூடுதல் சுவை கிடைக்கிறது.
நன்மைகள்:
லெமன் (எலுமிச்சை) மற்றும் புதினா போன்றவை ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன.
அதனால்,இந்த சர்பத் பானத்தை குடிப்பதால் உடலின் நோய் எதிப்பு சக்தி அதிகரித்து,தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நம் உடலுக்குள் நுழைவதை இவை தடுக்கின்றன.