ஹீரோ லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரை பிரபலம்!

சென்னையில் பிரமாண்டமாக தனியார் துணிக்கடை மற்றும் பல ஷாப்பிங் மால் மூலம் அறியப்பட்டவர் லெகான்ட் சரவணன். மேலும் அவரது கடைக்கு அவரே விளம்பரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். அதன் மூலம் வீட்டில் உள்ள சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவர் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். இந்த படத்தை உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெர்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வேல்ராஜ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் இவரை கலாய்த்து நேற்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டனர். அதில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் ஹீரோ சரவணன் அவர்களை மிகவும் கிண்டல் செய்து இருந்தனர்.
அதற்க்கு பதிலடியாகவோ அல்லது பதிலளிக்கும் விதமாகவோ பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, தனது இணையதள பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘ பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்து இருந்த அழகன் படத்தில் மம்முட்டி ஒரு டுடோரியல் கல்லூரியில் பயின்று வருவார். அப்போது சக மாணவர்கள் காலம் கடந்து வந்த மம்முட்டி பயில்வதை கிண்டல் செய்வர். ஆனால் ஹீரோயின் நீங்களெல்லாம் இப்போ படித்து அடுத்து சம்பாதிக்க போவீர்கள், ஆனால் அவர் ( மம்முட்டி ), சம்பாதித்து விட்டு தான் ஆசைப்பட்ட படிப்பை தற்போது பயில வந்துள்ளார்.’ என்கிற வீடியோ பதிவை என தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே போல தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி தான் சம்பாதிக்க வேண்டிய பணத்தை சம்பாதித்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பு ஆசையை இந்த புதிய படம் மூலம் நிறைவேற்ற உள்ளார் என்பது போல பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025