லெபனான் விபத்து.. பெய்ரூட்டில் 2 வாரம் அவசர நிலை பிரகடனம்.!

Default Image

பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட  அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து அடுத்த 2 வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லெபனான் வெடி விபத்து குறித்து  ஈரான், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்