லெபனான் வெடிவிபத்து.. பதவியை ராஜினாமா செய்த பிரதமர் ..!

Default Image

லெபனான் பிரதமர் ஹசன் டயப் தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் அவுனிடம் கொடுத்தார்.

லெபனான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பெய்ரூட் துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் என்னும் வேதிப்பொருளால் நிகழ்ந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், பேரழிவு குண்டுவெடிப்பில் இருந்து ஏற்படும் இழப்புகள் 10 பில்லியன் டாலர் முதல் 15 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கும்  அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் லெபனான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள லெபனானில் பெய்ரூட் குண்டுவெடிப்புக்குப் பின்னர் நிலைமை மோசமடைந்தது. நாடு முழுவதும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

அந்நாட்டின் பிரதமராகிய ஹசன் பதவி விலக வேண்டும் எனவும் நாட்டின் தலைவர்கள் அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி பொதுமக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீதிகளில் இறங்கி போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். சமீபத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் மற்றும்  ஒரு அமைச்சர் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, பிரதமர் ஹாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் கொந்தளிப்புக்கு பிரதமர் ஹசன் டயப் திங்கள்கிழமை (அதாவது நேற்று) மாலை தேசிய தொலைக்காட்சி பேசும்பொழுது  லெபனான் பிரதமர் ராஜினாமாவை அறிவித்தார். இது குறித்து பிரதமர் ஹசன் கூறுகையில்,  லெபனானில் ஊழல் அரசை விடப் பெரியது, மிகவும் அடர்த்தியான மற்றும் முட்கள் நிறைந்த சுவர் மாற்றத்திலிருந்து நம்மைப் பிரிக்கிறது; ஒரு வர்க்கத்தால் பலப்படுத்தப்பட்ட ஒரு சுவர்,நாங்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

அதன் ஆதாயங்களை எதிர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அனைத்து தவறான முறைகளையும் நாடுகிறது என கூறினார்.இந்த அரசாங்கத்தின் வெற்றி என்பது இந்த நீண்டகால ஆளும் வர்க்கத்தின் உண்மையான மாற்றத்தை குறிக்கிறது, அதன் ஊழல் நாட்டை மூச்சுத்திணறச் செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“கடவுள் லெபனானைப் பாதுகாக்கட்டும்” என்று அவர் கடைசி சொற்றொடரை மூன்று முறை மீண்டும் கூறினார். பின்னர், லெபனான் பிரதமர் ஹசன் டயப் தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் அவுனிடம் கொடுத்தார். அதனை அவர் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

லெபனானில், அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் நீண்ட காலமாக கோபத்தில் இருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ஆனால்,கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire