செல்ல பிராணிகளையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.! -அறிவுரை கூறும் அண்ணாத்த வில்லன்.!

Default Image

புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார். 

தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெகபதி பாபு. இவரது நடிப்பில், கடந்த 9-ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி, அண்ணாத்த, புஷ்பா, சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜெகபதி பாபு தனது செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ளார்.

jagapathi babu 3

படப்பிடிப்பில் பிஸியாக  இருக்கும் ஜெகபதி பாபு அமெரிவிக்காவில், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Jaggu Bhai

அதில், “எனது அன்பான நேரத்தை எனது குடும்பம், புத்தகங்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் அமெரிக்காவில் செலவழித்து வருகிறேன். புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் சிறந்தவையாக கருதுகிறேன். மனிதர்கள் இந்த பண்பை கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்