உங்கள் முகத்தை இளமையாக வைத்திருக்க இந்த 4 குறிப்புகளை தெரிஞ்சிக்கோங்க…!

Default Image

நமது சருமம் வயது முதிரும் பொழுது தானாகவே முதிர்ந்த ஒரு சுருங்கிய தோல்களை உடைய தோற்றத்தை பெறுவது வழக்கம் தான். ஆனால் யாருமே நாம் இளமையான தோற்றத்தில் இருந்து உடனடியாக முதிர் வயதுக்கு மாறிவிட வேண்டும் என்று விரும்புவதில்லை. அனைவருமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

இதற்கான சில இயற்கையான வழிமுறைகளை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது நாம் முதுமை அடைவது தாமதமாகும். இன்று என்ன இயற்கையான அழகு சாதனங்களை நமது முகத்தில் பயன்படுத்தும் பொழுது நமது முகம் இளமைத் தோற்றத்தைத் தருகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

முருங்கை கீரை

நன்மைகள் : முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது. இது நமது தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும் இந்த முருங்கைக்கீரையை நாம் சாப்பிடுவதே நமது தோல்களுக்கு மிகவும் நல்லது.

உபயோகிக்கும் முறை : முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் அழுக்குகள், சரும சுருக்கங்களை நீக்குவதற்கு இந்த முருங்கைக்கீரையில் பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்வகந்தா

நன்மைகள் : அஸ்வகந்தா முக சுருக்கங்களை நீக்கும் ஒரு சிறந்த ஒரு உணவு. இது பல நோய்களை தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இது உதவுகிறது. நமது முதிர்ந்த தோற்றத்தை மாற்றுவதற்கும், அஸ்வகந்தா பெரிதும் பயன்படுகிறது. இவை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : அஸ்வகந்தா மற்றும் அதன் உலர்ந்த பழங்களை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் இரவு தூங்குவதற்கு முன்பு சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.

வேப்ப மர வேர்

நன்மைகள் : வேப்ப மர வேரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. இது நமது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்களையும், கோடுகளையும் நீக்குவதற்கும் இது உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் நீங்கள் விரும்பினால் இதனுடன் யூகலிப்டஸ் எண்ணெயையும் கலந்து பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய்

நன்மைகள்: இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது சருமத்தை பிரீ ரேடிக்கல் செல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலமாக நமது சருமம் பளபளப்பாக மாறும். தோல் சுருக்கங்கள் நீங்கவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை: சுருக்கங்கள் நீங்கி தோல் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்