மலச்சிக்கல் நீக்கும் பனங்கிழங்கு குறித்து மேலும் அறியலாம் வாருங்கள்!
பனங்கிழங்கு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றுதான் கூறியாக வேண்டும். உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியுள்ள கிழங்கின் நன்மைகள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பனங்கிழங்கின் நன்மைகள்
இரும்பு சத்து குறைவாக இருப்பவர்கள் பனங்கிழங்கை காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடும் போது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் இது மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டதுடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. இந்த கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால் இது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.
உடல் பருமனாக வேண்டுமென விரும்புபவர்களும் பனங்கிழங்கை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடும்பொழுது பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள்ளுறுப்புகள் வலிமையாகும். மேலும் நார்சத்து இந்த பழங்களில் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு போன்ற பிரச்சினை உள்ளவர்களும் பனங்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்.