உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் கோதுமை ரவா தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !
கோதுமை ரவா தோசை நமது காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும்.
இதனை நாம் காலை உணவாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை -3/4
அரிசி மாவு -1/4
ரவை -1/2
புளித்த மோர் -1 கரண்டி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
சீரகம் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்த மல்லி -சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
ஒருபத்திரத்தை எடுத்து அதில் கோதுமை, அரிசி மாவு, ரவை, புளித்த மோர், வெங்காயம் ,பச்சைமிளகாய்,சீரகம் ,உப்பு, கொத்த மல்லி என அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றவும்.தோசை சிவந்ததும் திருப்பி போட்டு முறுகலாக எடுத்து பரிமாறவும்.