இட்லி மாவு இருக்கா? அப்போ டீ குடிக்கிற டைம்ல இந்த அருமையான குட்டி போண்டா செய்து பாருங்கள்..!

தேவையான பொருட்கள்: இட்லி மாவு – இரண்டு கப், அரிசி மாவு – 1 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, பூண்டு – 1 பல், உப்பு – 3/4 ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாயை எடுத்து கொண்டு அதில் சுடுதண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சியில் பூண்டு மற்றும் ஊற வைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து கொண்டு அதில் அரைத்து வைத்த இந்த கலவையை சேர்த்து அதனுடன் உப்பு, அரிசிமாவு மற்றும் ரவை சேர்த்து கொள்ள வேண்டும்.
இவற்றை நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் 10 நிமிடம் ஊற வேண்டும். அதனை அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் மாவை சிறிது போண்டாவாக போடுங்கள். பொன்னிறமாக வந்தவுடன் அதனை தட்டில் எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் எளிமையான சுவையான குட்டி போண்டா ரெடி. இதனை டீ குடிக்கும் வேளையில் மொறு மொறு சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025