சுவையான மற்றும் ஆரோக்கியமான இடியாப்ப சொதி செய்வது எப்படி தெரியுமா!
இடியாப்பம் என்பது மைதா மாவு கொண்டு செய்யக்கூடிய ஒரு மென்மையான சுவையான உணவு. இதற்கு சிலர் சீனி மற்றும் தேங்காய் பூவை பயன்படுத்தி சாப்பிட்டாலும், பலருக்கு காரசாரமான உணவு சாப்பிட பிடிக்கும். இதற்கு பால் சொதி செய்து சாப்பிடலாம். அந்த அட்டகாசமான சொதி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்
- மஞ்சள் தூள்
- வெங்காயம்
- தக்காளி
- பச்சைமிளகாய்
செய்முறை
முதலில் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொண்டு பிறகு சட்டியில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் சிறிது மிளகு சேர்த்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம். எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கினால் அட்டகாசமான இடியப்பம் சொதி தயார்.