அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்
இந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி இன்று அறியலாம் வாருங்கள்.
கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்
கருவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் வைட்டமின் ஏ பி சி போன்ற சத்துக்களும் நிறைந்து உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அறவே கிடையாது எனவே இந்த கருவேப்பிலையின் உள்ள வைட்டமின் ஏ சத்து காரணமாக கண்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் மாலைக்கண் நோய், கண் உறுத்தல் போன்ற பிரச்சினைகளை இது சரி செய்கிறது. கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் கருவேப்பிலையை தொடர்ந்து உண்டு வரும் பொழுது நிச்சயம் பலன் அடையலாம் மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கருவேப்பிலை ஒரு நல்ல தீர்வாகும். இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் காரணமாக வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை உட்கொள்ளும் பொழுது உடல் பருமன் கணிசமாக குறைந்து அழகிய உடல் பெறலாம். மேலும் இரத்த சோகை நோயைத் தீர்க்கக் கூடிய குணநலன் கறிவேப்பிலையில் உள்ளது. முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் நரை முடி முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் ஆரோக்கியமான முடி வளர உதவுகிறது.
வலிமையான எலும்புகள் உருவாக இதிலுள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உதவுவதுடன் பற்களும் வலிமை பெறுகிறது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் கருவேப்பிலை உதவுவதுடன் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து காரணமாக உடல் பருமன், மலச்சிக்கல் சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். முகத்தில் கருவேப்பிலை அரைத்து பூசி வரும்பொழுது இளமையான தோற்றம் கிடைப்பதுடன் இள வயதில் ஏற்படக்கூடிய முதுமைத் தோற்றமும் மறையும். மேலும் நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த கருவேப்பிலை உதவுவதுடன், ரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. வெறும் வயிற்றில் கருவேப்பிலை உட்கொள்ளும் பொழுது நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.