ரியல்மி பேட் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளன.
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி (Realme) நிறுவனத்தின், முதல் டேப்லெட் மற்றும் ரியல்மி பேட்(Realme Pad), இந்த ஆண்டில் எப்போதாவது வருகிறது என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில்,அதிகாரப்பூர்வமாக வெளிவிடுவதற்கு முன்னதாகவே,ரியல்மி ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.அதன்படி,ரியல்மி பேட்,முன் மற்றும் பின் பக்கங்களில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும்,இதனால் முன்னெப்போதையும் விட வீடியோ கால் பேச,மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும்,மேலும்,மக்கள் டேப்லெட்களை அதிகம் பயன்படுத்துவதால், 7000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலம் நீடிக்கும்:
ரியல்மி பேட்,முன் கேமரா ஆட்டோஃபோகஸுக்கு பதிலாக நிலையான-ஃபோகஸாக இருக்கும்.மேலும்,7000mAh பேட்டரியையும் கொண்டிருப்பதால் டேப்லெட் நீண்ட காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபாட்டுடன் போட்டி:
இதற்கிடையில்,ரியல்மி பேட் ஆனது ஆப்பிள் ஐபாட் போன்று தட்டையான பக்கங்களுடன் சுற்றி ஒரு உலோக பூச்சு பூசப்பட்டு, பின்புறத்தில் ஒரு கேமரா மட்டுமே இருப்பதைக் காட்டியுள்ளன.இதனால்,ரியல்மி பேட் ஆப்பிள் ஐபாடிற்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
வெளியீடு:
மீண்டும் ஐரோப்பிய சந்தைக்கான தனது GT 5G மாடல் ஆண்ட்ராய்டு போன் வெளியீட்டு நிகழ்வில்,ரியல்மி இந்த ஆண்டு ரியல்மி பேட் ஐ அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே கூறியது.அதன்படி,டேப்லெட் மட்டுமல்லாமல், நிறுவனம் ‘ரியல்மி புக்’ என்று அழைக்கப்படும்,தனது முதல் லேப்டாப் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இதனால்,ரியல்மி பேட் மற்றும் ரியல்மி புக் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால்,தேதி குறித்து தகவல் வெளியாகவில்லை.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…