3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் – உக்ரைன் அதிபர்..!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 26 நாள்கள் ஆகிவிட்டது. ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கல் நடத்தி வருகிறது. உக்ரைனில் மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மூன்றாம் உலகப் போர்:
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். அவ்வாறு செய்யத் தவறினால் ரஷ்யாவிற்கு “பெரும் இழப்புகள்” ஏற்படும் என்று எச்சரித்தார்.