கொரோனா தடுப்பூசி சோதனையின் இந்தோனேசியாவை சேர்ந்த முன்னணி பெண் விஞ்ஞானி மரணம்…!

Default Image

இந்தோனேசியாவை சேர்ந்த சினோவேக் தடுப்பூசி சோதனையின் முன்னணி பெண் விஞ்ஞானி நோவிலியா ஸ்ஜாஃப்ரி உயிரிழந்துள்ளார்.

அதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் சினோவோக் தடுப்பூசி மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை கண்டறிவதற்கான சோதனைகளில் முன்னணி விஞ்ஞானியாக விளங்கிய நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானி தற்பொழுது உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், இவர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் போன்ற நெறிமுறைகளின்படி புதைக்கப்பட்டதால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசுக்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம் பயோஃபர்மாவின் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானியின் மரணம் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், தடுப்பூசியை கண்டறிவதில் மட்டுமல்லாமல், பல கண்டுபிடிப்புகளில் இவர் முன்னணித் தலைவராக இருந்ததாகவும் கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்