பிரபல நடிகரின் படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த முன்னணி இயக்குனர்.! ஓபனாக கூறிய ஷாலு ஷம்மு.!

விஜய் தேவர்கொண்டாவின் படத்தில் நடிப்பதற்காக தன்னை பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பிரபல நடிகைகள் பலர் மீ டுவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் மீது புகார் அளித்து வருகின்றனர்.தங்களை படுக்கைக்கு அழைத்ததாக கூறி எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளில் தற்போது நடிகை ஷாலு ஷம்முவும் இணைந்துள்ளார் . வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் .
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் ,ஆண் நண்பருடன் இணைந்து ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு ரசிகர்களிடம் பேசிய போது அதில் ஒருவர் நீங்கள் மீ டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளீரா என்று கேட்டுள்ளார் .அதற்கு எந்த தயக்கமும் இன்றி பதிலளித்த ஷாலு ஷம்மு,நானும் மீ டு பிரச்சினைகளை கடந்து தான் வந்திருக்கிறேன் .ஆனால் அதுகுறித்த எந்த புகாரையும் அளிக்கவில்லை.புகார் அளித்தும் எந்த பயனில்லை என்று தெரியும்.
சமீபத்தில் விஜய் தேவர்கொண்டாவின் புது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் , அதில் தான் நடிப்பதற்காக பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும் பெரிய நடிகர்களின் படங்களில் இதுபோன்ற சில காம்ப்ரமைஸ்களை செய்ய தவறினால் அவர்களின் திறமையும் நிராகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவரது இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025