நடிகை நிஹாரிகாவின் திருமண நிகழ்ச்சியில் சிரஞ்சீவி,பவன் கல்யாண், அல்லு அர்ஜுன்,ராம் சரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா . தெலுங்கில் பல படங்களில் நடித்த இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும்,நடிகரும், தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகள் மட்டுமில்லாமல் தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் வருண் தேஜ்ஜூவின் உடன்பிறந்த தங்கையுமாவர் .அது மட்டுமின்றி ராம் சரண்,பவன் கல்யாண்,அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் இவரது உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நிஹாரிகாவுக்கும் , ஆந்திரா குண்டூர் ஐ.ஜி-யின் மகனுமான சைதன்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிலையில் நேற்றிரவு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஓபாராய் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் இவர்களது திருமணம் நடைபெற்றது.அதில் அல்லு அர்ஜுன்,ராம் சரண்,பவன் கல்யாண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் ,அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…