தலைவி என் வாழ்வில் மிக முக்கியமான படம் – கங்கனா ரனாவத்.!
தலைவி என் வாழ்வில் மிக முக்கியமான படம் என கங்கனா ரனாவத் தெரிவித்துளளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் நடிகை கங்கனா ரனாவத் பேசியது ” இந்த 2 வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளோம். பல தடைகளை கடந்து திரையரங்கிற்கு இந்த படத்தை கொண்டுவந்துள்ளோம். அர்விந்த்சாமி, மதுபாலா மேடம் போன்ற பிரபலங்களுடன் நடித்தது பெருமை.
சமுத்திரகனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை ஒரு சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜி.வி பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம் வாய்ப்பளித்த இயக்குனர் விஜய்க்கு நன்றி”. என தெரிவித்துள்ளார்.