தலைவர் தீபாவளி தான்… “அண்ணாத்த” திரைப்படத்தில் இத்தனை பாடல்களா…?
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் 6 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இசையமைப்பாளராக இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. அதற்கு பின்னர் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது காரணமாக முழுவதுமாக [படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என்று ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியானது. தற்போது “அண்ணாத்த” திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 4 2021 அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 25 ஆம் தேதி அறிவித்தது இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ஆம், அண்ணாத்த படத்தில் 6 பாடல்கள் உள்ளதாம். இதில் முதல் பாடலை பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். விரைவில் படத்திற்கான அடுத்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.