புகைப்பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா!

Default Image

நடிகை நஸ்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், நேரம், ராஜாராணி, நையாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே மலையாள படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இவர் கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் பகத் பசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர், தற்போது, தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
நடிகை நஸ்ரியா நடிக்கும் படத்திற்கு டிரன்ஸ் என பெயரிட்டுள்ள நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அவர் புகை பிடித்தவாறு, ரவுடி கெட்டப்பில் உள்ளார். இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்