வலிமை டீசர் குறித்த லேட்டஸ்ட் தகவல்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Default Image

வலிமை திரைப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வெளியானது . வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும், டீசர் வெளியாகும் தேதிக்காக அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர். அந்த வகையில், தற்போது வலிமை படத்தின் டீசர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது வலிமை, திரைப்படத்தின் டீசர், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில்,  படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 5 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தயாரிப்பாளர் போனிகபூர் வலிமை திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்