மறைந்த சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு .! கண்ணீரில் ரசிகர்கள்.!

இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட வீடியோ மற்றும் பதிவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா .இவர் சீரியலில் நடிப்பதற்காக தனது வருங்கால கணவரான ஹேம்நாத் உடன் சென்னை அருகிலுள்ள நாஙரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் .
இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை சரண்யாவுடனான ஒரு அழகான வீடியோவை பகிர்ந்துள்ளார் . அதில் அவர் போன் பேசிய படி நிற்க சரண்யா மேடம் லவ் பண்ண ஆரம்பித்ததிலிருந்து ரொம்ப பிஸி என்று கூற சித்ரா தனது அழகான சிரிப்பை வெளிப்படுத்துகிறார் .அதே போன்று தனது அழகான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .இரவில் மகிழ்ச்சியாகவும், சிரித்து கொண்டும் இருந்த சித்ரா அதிகாலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பல ரசிகர்கள் அவரது பதிவிற்கு பலர் தங்களால் இது ஏற்று கொள்ள முடியவில்லை,ஏன் இவ்வாறு செய்தார் என்று பல கேள்விகளையும் , தங்களது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர் .
View this post on Instagram
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025