காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு!

Default Image

காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் மக்கள் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும் எரிபொருள் சாதனங்கள் பயன்படுத்த கூடிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளதலும், காற்று மாசுபாடு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளும் வருடம்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் எனும் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் காற்று மாசுபடுவதால் கருவிலேயே குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இதனால்தான் குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை குழந்தைகள் பிறப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தைகள் சிலர் பிறந்ததும் இறப்பதற்கும் இதுதான் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளதுடன், எரிபொருள் கரி, மரக்கட்டை விலங்குகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கூடிய எரிபொருட்கள் மூலம் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டால் 5 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இது தான் காரணமாக கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் பெருமளவில் கருவில் உள்ள குழந்தைகள்தான் பாதிக்கப் படுகின்றனர் என்பதே இந்த அறிக்கையின் அதிர்ச்சித் தகவல். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாகவும், அதே சமயம் இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்