தனது முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா..!காரணம் ஏன் தெரியுமா..?
பிரபல தனியார் தொலைக்காட்சி நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த முதல் நாளிலிருந்து ரசிகர் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் லாஸ்லியா மூன்றாவது வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டி முடிந்த பிறகு எந்த வித பேட்டியோ , சமூக வலைதளங்களில் இது பற்றிய பதிவையும் பதிவிடாமல் லாஸ்லியா இருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் “முதலில் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்படுகிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப்பொருத்தவரை நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். இது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது என தெரியும். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்ததற்கு என்னை மன்னிக்கவும். ஐ லவ் யூ சோ மச் என கூறியுள்ளார்.