திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
சென்னை உயர்நீதிமன்றத்தில், மணிகண்டன் என்பவர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அதை மீட்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது, தமிழக அரசின் தரப்பில், நீதிமன்றம் திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டது. மேலும், கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில், அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.