கொச்சியில் ரூ.1.35 கோடி மதிப்பில் விற்பனைக்கு வந்த விராட் கோலியின் லம்போர்கினி…!

Default Image

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முன்னதாக பயன்படுத்திய லம்போர்கினி 1.35 கோடிக்கு கொச்சியில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருந்த விலையுயர்ந்த ஆடம்பர காரான ஆரஞ்சு லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர்,தற்போது கொச்சியில் உள்ள பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.

முன்னதாக,ஒரு ஆட்டோமொபைல் வலைத்தளத்தில் இதனைக் கண்ட,கோலி இந்த லம்போர்கினியை 2015 இல் வாங்கினார்.ஆனால்,சிறிது நாட்களுக்குப் பின்னர் விராட் அதை விற்று விட்டார்.

இந்நிலையில்,புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த கார் இப்போது கொச்சியில் உள்ள பிரீமியம் மற்றும் ஆடம்பர கார் விற்பனையாளரான ராயல் டிரைவில் ரூ .1.35 கோடிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,ராயல் டிரைவில் சந்தைப்படுத்தல் மேலாளர் கூறுகையில்:” இந்த லம்போர்கினி கார் 2013 கல்லார்டோ மாடல்.கிரிக்கெட் வீரரால் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இது 10,000 கிமீ வரை மட்டுமே ஓடியுள்ளது.நாங்கள் இந்த பிரபல காரை கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பிரீமியம் மற்றும் ஆடம்பர கார் விற்பனையாளரிடமிருந்து ஜனவரி 2021 இல் முன்கூட்டியே வாங்கினோம்.இந்த கார் 100 கிமீ வேகத்தை நான்கு வினாடிகளில் எட்டக்கூடியது மற்றும் இதன் அதிகபட்ச வேகம் 324 கிமீ ஆகும்,என்று கூறினார்.

2003 முதல், உலகெங்கிலும் உள்ள லம்போர்கினி ரசிகர்களுக்கு சிறந்த மாதிரியாக இந்த கார் உள்ளது.எனினும்,நவம்பர் 2015 இல், கடைசி கல்லார்டோ வெளியிடப்பட்டது.

விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு கேப்டன்சியிலிருந்து பொறுப்பில் இருந்து விலகுகிறார். அதே போல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 முடிந்தவுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் விடைபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்