லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ இந்தியாவில் அறிமுகம்…..

Default Image

லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன் விவரக்குறிப்புகள், விலை, அம்சங்கள் போன்றவற்றை காண்போம்.

இத்தாலியை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி அதன் புதிய ஹுராக்கன் எஸ்.டி.ஓ மாடலை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

விலை:

இதன் ஆரம்ப விலை ரூ. 4.99 கோடி ஆகும் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா).இது மற்ற  ஹுராக்கன் மாடலையும் விட சிறந்த செயல்திறனை வழங்குவதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு உலகளவில் வெளிப்படுத்தப்பட்ட, ஹுராக்கன் எஸ்.டி.ஓ ஆனது, ஹுராக்கான் சூப்பர் ட்ரொஃபியோ ஈ.வி.ஓ மற்றும் ஹுராக்கன் ஜி.டி 3 ஈ.வி.ஓ ரேஸ் கார்  ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு 24 மணிநேர டேடோனா சாம்பியன்ஷிப்பை மூன்று முறை வென்றது.

லம்போர்கினியின் ஆர் அன்ட் டி (R&D) ஸ்குவாட்ரா கோர்ஸ் மற்றும் சென்ட்ரோ ஸ்டைல் ​​துறைகளால் உருவாக்கப்பட்டது.இதனால்,ஹுராக்கன் எஸ்.டி.ஓ எப்போதும் சிறந்த செயல்திறன் சார்ந்த ஹுராக்கன் மாடலாக கருதப்படுகிறது.

மேலும்,இது குறித்து லம்போர்கினி இந்தியாவின் தலைவர் ஷரத் அகர்வால் கூறுகையில்:”லம்போர்கினிக்கு இந்திய சந்தை தொடர்ந்து மிக முக்கியமானது.எங்கள் லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ, அறிமுகமானது, இந்தியாவில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் உள்ள ஒரு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில்,அவர்கள் சாலைகளில் தினமும் வாகனம் ஓட்டும்போது ரேஸ் காரின் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தைத் தேடுகிறார்கள்”,என்று கூறினார்.

முக்கிய அம்சங்கள்:

லம்போர்கினி ஹுராக்கன் எஸ்.டி.ஓ  5.2 லிட்டர் வி 10 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.இது 630 ஆர்.பி.எம் (RPM) வேகத்தில் 630 பிஹெச்பி மற்றும் 565 என்எம் (NM) ஆகியவற்றை 6,500 ஆர்.பி.எம் வேகத்தில் உருவாக்க ஏழு-வேக எல்.டி.எஃப் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படுகிறது.

இருப்பினும்,இதன் இலகுரக கட்டுமானம், மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் மற்றும் சிறந்த பிரேக்கிங் செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக, ஹுராக்கன் எஸ்.டி.ஓ மூன்று வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ / மணி (km/hr) வரை செல்ல முடியும்.

ஏனெனில்,ஹுராக்கன் எஸ்.டி.ஓவின் பாகங்கள் கிட்டத்தட்ட 75 சதவீதம் கார்பன் ஃபைபரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.மேலும்,இதில் சாலையில் செல்ல எஸ்.டி.ஓ, டிராக்குக்கு (Track) டிராஃபியோ, மற்றும் மழைக்கு பியோஜியா என்ற மூன்று ஓட்டுநர் முறைகள் (driving modes) உள்ளன.இதன்காரணமாக,ஓட்டுநர் செயல்திறன் மிகவும் மேம்பட்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்