பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ்…!
பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இந்த நிலையில் இந்த வைரஸ் ஆனது உருமாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாகக் கூறப்படும் டெல்டா வகை வைரஸானது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் ஏராளமான நாடுகளில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரஸ் பரவலை தடுக்க தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, தற்போது லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இந்த வைரஸ் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் டெல்டா வகை வைரசை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் முதன்முறையாக பெரு நாட்டில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.