பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாக பரவும் தகவல் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
அணைத்து தரப்பு ரசிகர்களால் அதிகம் பார்க்க எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. விரைவில் 5-வது சீசனும் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
ப்ரோமோவில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் மட்டுமே அறிவித்திருந்தனர். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5- வில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள், எப்போது ஒளிபரப்பாகிறது என்ற எதிர்ப்பு நிலவியுள்ளது.
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் சீசன் 5- வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் என பிரியங்கா, ஷகீலாவின் மகள் மிலா, பவனி ரெட்டி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது.
அந்த வகையில், கடந்த 4-வது சீசன் நடைபெறும் போதும், இப்போதும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்வதாக தகவல்கள் பரவி வந்தது. அதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ” பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை நான் பார்க்கிறேன். நான் பிக் பாஸ் சீசன் 5- வில் இல்லை, தயவுசெய்து பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…