4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.! ஹீரோ இவர் தானாம்.!

தமிழில் 4 வருடங்களுக்கு பிறகு ஆர்யுடன் ஜோடி சேர்ந்து லட்சுமி மேனன் நடிக்க போவதாக கூறப்படுகிறது.
சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அவரது முதல் படமே பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து பல வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. அதனையடுத்து கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தனது படிப்பில் கவனம் செலுத்த போவதாக கூறி சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்தார். மேலும் பிரபுதேவாவுடன் ஜில் ஜங் ஜக் படத்திலும், முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் அந்த படம் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே நிற்கின்றன .
இந்த நிலையில் தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறாராம். இயக்குநர் வசந்தபாலன் உதவியாளரான ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்க லட்சமி மேனன் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025