பிக் பாஸ் 4 வது சீசனில் களமிறங்கும் லட்சுமி மேனன்…!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வைரலானது இந்த நிலையில் மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் நடிகை லெக்ஷ்மி மேனன் அவர்கள் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் – 2ல் இவர் பெயர் பரிசீலிக்கப்ப ட்டதாகவும், ஆனால் அவரால் கலந்து கொள்ளாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்பொழுது இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க பட வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.