அர்ஜென்டினாவில் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய ஏரி…! காரணம் என்ன தெரியுமா?
அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரி இரசாயன மாசுபாடு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியாவில் உள்ள ஏரி ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறமாக மாறி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், ஏரியில் வளர்க்கப்படும் இறால்களை பாதுகாப்பதற்காக இந்த ஏரியில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.
இதற்காக மீன் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சோடியம் சல்பேட் எனும் பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த இரசாயனம் தான் இந்த நிறத்திற்கு காரணம் எனவும், அந்த கழிவுகள் காரணமாக தான் இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறமாக மாறி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.