16 ஆண்டுகளுக்கு பிறகு ரீ – என்ட்ரி கொடுக்கும் லைலா.!

தமிழ் சினிமாவில் பிதாமகன், நந்தா, தீனா, போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை லைலா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகினை விட்டு விலகினார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில், லைலா 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தின் மூலம் ரீ -என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி, இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ் மித்ரன் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து “சர்தார் “என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார்.
மேலும், இப்படத்தின் மூலம் 16 ஆண்டு இடைவேளைக்கு பிறகு நடிகை லைலா சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார். இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025