பிரமாண்டமாக உருவாகி வரும் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’.! தமிழக உரிமையை வாங்கிய லைக்கா.!
ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்,ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் இந்த படத்தின் தமிழக உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.ஆம் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக உரிமையை சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் லைகா நிறுவனம் கைபற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே ராஜமௌலியின் மாவீரன்,நான் ஈ,பாகுபலி ஆகிய படங்கள் தமிழகத்தில் மாபெரும் வசூலை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.