பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை.. பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தடை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை குறித்து வழக்கு ஒன்று தொடரப் பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த நடைமுறையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது, இதற்கு மருத்துவ அடிப்படை இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை புண்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தான் நாட்டில் ஒரு முக்கிய தீர்ப்பு என பலரும் கூறி வருகின்றனர்.
கன்னித்தன்மை சோதனைகள்:
கண்ணனித்தன்மை சோதனை என்பது, ஹைமனை ஆய்வு செய்வது. அது, பெண்ணின் வெஜினா (vagina) இரண்டு விரல்களை விடுவது ஆகும். இதன்மூலம் ஒரு பெண் “கன்னி”யா என்பதை தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கையின் கீழ் நடத்தப்படும் ஆக்கிரமிப்பு பரிசோதனைகள் ஆகும். உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, உலகெங்கிலும் உள்ள பல பல நாடுகளில் ஒரு பெண் அல்லது பெண்ணின் “மரியாதை அல்லது நல்லொழுக்கத்தை” மதிப்பிடுவது எனவும், அது நீண்டகால பாரம்பரியம் என தெரிவித்துள்ளது.
செய்யப்படும் காரணம்:
இதுபோன்ற சோதனைகள், திருமணத்திற்கு முன் அல்லது வேலைவாய்ப்பு தகுதி போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படுகின்றன. ஆனால் சில பிராந்தியங்களில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் கன்னித்தன்மை சோதனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)
INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!
February 11, 2025![India vs England 3rd ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/India-vs-England-3rd-ODI-.webp)