மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்காக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் Mom என்ற படத்தை இயக்கிய ரவி உதயவர் இயக்கவுள்ளார். மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் தொடர்ந்து 3 மாதங்கள் வரை கால்ஷீட் வழங்கியுள்ளதாகவும், இதற்காக அவர் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே ஹீரோயின் நயன்தாரா என்று கூறும் நிலையில் தற்போது அவரையே மாளவிகா மோகனன் மிஞ்சி விட்டார். 15 ஆண்டுகள் சினிமாவில் இருந்து தற்போது தான் 3 அல்லது 4கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஒரே படத்தில் நடித்து விட்டு இரண்டாம் படத்திலே 5 கோடியா என்ற ஷாக்கில் உள்ளார்களாம் ரசிகர்கள். இருப்பினும் மாஸ்டர் நாயகியின் பாலிவுட் படத்தினை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…