பிளாக் பஸ்டர் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்த லேடி சூப்பர்.!என்ன படம் தெரியுமா .?
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பிரபல நடிகையாக வலம் வரும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும் காதலான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க மறுத்துள்ளார். ஆம் 2013ல் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘குயின்’ என்ற இந்தி படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதனையடுத்து இந்த படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாரா அவர்களை அணுகியதாகவும், அவர் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து திரிஷாவை அணுக அவரை மறுத்துள்ளார் . அதன் பின்னர் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்று உருவாகும் இந்த படத்தில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் ‘தாட் ஈஸ் மகாலட்சுமி’ என்ற பெயரில் தமன்னாவும், கன்னடாவில் ‘Butterfly’ என்ற பெயரில் பரூல் யாதவும் மற்றும் மலையாளத்தில் ‘ZamZam’ என்ற பெயரில் மஞ்சிமா மோகனும் நடித்து வருகின்றனர்.