வில்லு படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து பல படங்களின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் தற்போது இனி வரவிருக்கும் படங்களை குறித்த புது புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா அடுத்த படத்தில் இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா இயக்கத்தில் இசாரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிடங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இரட்டை ஹீரோ திட்டம் ஒன்றை எடுக்க போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். ‘இரட்டை ராஜா வெள்ளை ராஜா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் கார்த்தி மற்றும் விஷால் நடிப்பதாக கூறப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட இந்த படம் கடைசியில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த படத்தை எடுக்க போவதாகவும், இதில் விஷாலுக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கார்த்தி நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…