பெண்களே…! சானிட்டரி பேடை வாங்கும் போது மறக்காமல் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து கொள்ளுங்கள்…!

மாதவிடாய் சுழற்சி காலகட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்துவதுண்டு. இந்த சுழற்சியானது 3-5 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நாட்களில் பெண்கள் சானிட்டரி பேர்டை உபயோகிப்பதுண்டு. ஆனால், பெண்கள் இந்த சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மலிவான விலையில் வாங்காதீர்கள்
பெண்கள் மலிவான விலையில், சானிட்டரி பேட் வாங்கும் போது அதன் தரம் குறைவாக இருக்கும் போது, அது நமக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும். எனவே, மிகவும் விலை மலிவான சானிட்டரி பேட்டை தவிர்ப்பது நல்லது.
தரமான சானிட்டரி பேட்
பல சானிட்டரி பேட் பிராண்டுகள் நல்ல கலவையுடன் உருவாக்குகின்றன. சானிட்டரி பேட்களில் மேல் பட்டை மட்டும் இயற்கையானதாகவும், அதற்கு கீழ் உள்ள பட்டைகளில் தரமற்றதாகவும், தீங்கு விளைவிக்க கூடிய கெமிக்கல் கலந்ததாகவும் காணப்படும். எனவே, தரமான பிராண்டுகளில் சானிட்டரி பேட் வாங்குவதை பழக்கமாக கொள்ளுங்கள்.
எளிதில் அகற்றக்கூடிய சானிட்டரி பேட்
எளிதில் அகற்றக்கூடிய சானிட்டரி பேட்டை உபயோகிக்காதீர்கள். இவை, உடலுக்கும், சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக காணப்படும்.
மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி பேட்
செயற்கையான முறையில் தயாரிக்க பயன்படும் சானிட்டரி பேட்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை தான் நமக்கும் சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பானது.