தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. அந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது.
நாம் நமது வீடுகளில், தினமும் சமையலின் போது தேங்காயை பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. ஆனால், இந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
தேங்காய் நாரை எடுத்து, அதை இரண்டு கைகளாலும் உதிர்க்க வேண்டும். அப்படி உதிர்க்கும் போது வரக் கூடிய துகள்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்து வைத்துள்ள துகள்களை, நாம் வளர்க்க கூடிய செடிகளுக்கும் போட்டு விட வேண்டும்.
இவ்வாறு போடுவதால், நாம் வெளியே சென்றாலும், யாரிடமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொல்லிவிட்டு செல்ல வேண்டாம். ஏனென்றால், நாம் செடியை சுற்றி போட்டிருக்கும் இந்த துகள்களோடு, ஒருமுறை தண்ணீர் ஊற்றி விட்டு சென்றாலே, நீண்ட நாட்களுக்கு தண்ணீர் பசை இருப்பது போல இருக்கும்.
தேங்காய் நார்களை மாலை வேளையில் கொளுத்தி விட்டால், அந்த வாசனைக்கு கொசு தொல்லை இருக்காது. பின் நாம் பாத்திரம் கழுவ, அதற்கென்று விலை கொடுத்து ஸ்கிரப்பர் வாங்காமல், அந்த தேங்காய் நார்களை சுருட்டி எடுத்து வைத்துக் கொண்டால் அவற்றை கொண்டு பாத்திரம் கழுவலாம். அவ்வாறு கழுவும் பொது, கறைகள் எல்லாம் போய்விடுகிறது. மேலும், இந்த நார்களில் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றலும் உள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…