பெண்களே…! இனிமே பயன்படுத்திய டீ தூளை தூக்கி எறியாதீங்க…!
பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம்.
நாம் தினமும் நமது வீடுகளில் தேநீர் குடிப்பதுண்டு.இதற்காக நாம் தேயிலையை பயன்படுத்துவதுண்டு. நாம் தேநீருக்கு தேயிலையை பயன்படுத்திய பின், அதனை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அந்த பயன்படுத்திய தேயிலையை, நமக்கு உபயோகப்படும் விதத்தில் பல வழிகளில் பயன்படுத்தலாம்.
தற்போது இந்த பதிவில், பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.
- பயன்படுத்திய தேயிலையை நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பின்பு அதனை நமது வீடுகளில் வளர்க்கும் செடிகளுக்கு போட்டால் செடி செழிப்பாக வளரும்.
- நாம் மீன், இறைச்சி, நண்டு, இறால் போன்ற அசைவ உணவுகளை சுத்தப்படுத்திய பின் நமது கைகளில் வாடை எடுக்கும். அப்படி இருக்கும் காய வைத்து வைத்துள்ள தேயிலையை எடுத்து கைகளில் உரசினால் அந்த வாடை இல்லாமல் போய்விடும்.
- ஒரு டிஷ்யூ பேப்பரில் காய்ந்த தேயிலையை ரப்பர் பேண்டை வைத்து சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நாம் பயன்படுத்தக்கூடிய ஷூவின் உள் பகுதியில் வைத்தால், கெட்ட வாடை வராது. மேலும், பூச்சிகள் அண்டாமல் அது பாதுகாக்கும்.
- இந்த தேயிலையை வைத்து டீ பேக்கை தயார் செய்து, அதனை பிரிட்ஜின் டோரில் வைத்தால், கெட்ட வாடைகள் இருந்தால் அதனை போக்கிவிடும்.
- மிக்சியில் இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள் ஏதாவது அரைத்தால், அதன் வாடை அடுத்த முறை நம் மிக்சியை பயன்படுத்தும் போது இருக்கும். அப்படி சமயங்களில், காய வைத்துள்ள தேயிலை தூளை போட்டு குலுக்கி விட்டு பின் அதனை எடுத்துவிட வேண்டும். இப்படி செய்தால், அந்த வாசனை போய்விடும்.