பெண்களே…! உங்கள் வீட்டில் உள்ள குக்கரை நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டுமா…? அப்ப இப்படி செய்து பாருங்க…!
குக்கரை நீண்ட நாட்கள் எந்த ஒரு பழுதும் இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக இன்று அனைத்து பெண்களுமே தங்களது சமையலறையில் குக்கரை பயன்படுத்துகின்றனர். இந்த குக்கரை பயன்படுத்துவதன் மூலம் எரிவாயு சிக்கனம் ஆவதோடு, வேலையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குக்கரை நீண்ட நாட்கள் எந்த ஒரு பழுதும் இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாக நாம் குக்கரில் என்ன சமையல் செய்தாலும் சமைத்து முடித்த பின் கேஸ்கட் மற்றும் விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைத்து வைத்துவிடவேண்டும். மேலும் இதில் உள்ள துணுக்குகளை அல்லது குச்சிகளை வைத்து நன்றாக சுத்தம் செய்து வைக்கவேண்டும். குக்கரை நாம் சமையலுக்கு பயன்படுத்தாத வேலைகளில் அவற்றை மூடியை வைத்து மூடி வைக்கக் கூடாது.
சமைத்து முடித்த பின் குக்கர் மூடியை சிலர் திறந்து வைப்பார். அப்போது கேஸ் கேட்டை எடுக்காமல் அப்படியே வைத்து விடுவார்கள். இவ்வாறு சூட்டோடு அப்படியே வைத்தால் ரப்பர் இறுகி போய் விடும். இதனால் கேஸ்கட் நீடித்த நாட்கள் உழைக்காது. தினமும் சமைத்து முடித்த பின் ரப்பர் கேஸ்கெட் எடுத்து. நன்கு இழுத்து விட்டு தண்ணீரில் ஊறிய பின் கழுவி எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் நாம் குக்கரை வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே கேஸ்கட் இருக்கும். மேலும் குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறையாவது எண்ணெய் விட வேண்டும். அப்படி விட்டு வந்தால், துரு பிடிக்காமல் இருக்கும். குக்கரில் சமைக்கும்போது அடிப்பிடித்து விட்டால், பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.