பெண்களே! பட்டுப்புடவை பிரியரா நீங்கள்! அப்ப உங்களுக்காக தான் பதிவு!

Default Image

பெண்கள் பட்டுப்புடவையை பராமரிக்கும் முறை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்தவகையில், பெண்களுக்கு பட்டுப்புடவை என்றாலே மிகவும் பிடித்தமான ஒரு ஆடை. எந்த மங்களகரமான நிகழ்வுகளுக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆடை பட்டு புடவையாக தான் இருக்கும்.

ஆனால், பல ஆயிரங்களை செலவு  செய்து வாங்கும் பட்டுப்புடவையை எவ்வாறு பராமரிப்பது, எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று அறிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், பட்டுப்புடவையை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி  பார்ப்போம்.

பராமரிப்பு முறைகள்

பட்டு புடவைகளை, பாலியஸ்டர், கரிஷ்மா, ஆஸாயி போன்ற போலிகள் கலந்து தயாரிக்கப்படுகிற நிலையில், புடவையை வாங்கும் போது மிகவும் கவனமாக வாங்குவது மிகவும் அவசியம்.

நாம் கடைகளில் இருந்து புடவையை வாங்கி வந்த பின், அந்த புடவைகளை அதிக நாட்கள் பாலிதீன் கவர் அல்லது பையிலேயே வைத்திருத்தல் கூடாது. பட்டு புடவைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை காற்றாட உலரவிட்டு, மடிப்புகளை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.

பட்டு புடவைகளின் மீது பாரமான எந்த பொருட்களையும் வைப்பதை தவிர்க்க வேண்டும். பட்டு துணியை தண்ணீரில் நனைத்தால், சரிகை உப்பி, துணி சுருங்கிவிடும், ஆனால், உலர்ந்த பின் துணி சாதாரண நிலைக்கு வந்துவிடும். சரிகை அப்படியே இருந்துவிடும். இது புடவையின் அழகைக் கெடுத்துவிடும்.

பட்டு புடவையை நாம் அடிக்கடி காட்டுவதில்லை. எதாவது விஷேசமான நாட்களில் தான் கட்டுவதுண்டு. எனவே, பட்டு புடவைகளை கட்டாமல், அலமாரியிலேயே வைத்திருந்தால், பட்டின் பசை துணியை நாசமாக்கி விடும்,  எனவே, பட்டினை ஒரு காட்டன் துணியால், சுற்றி வைத்தால் அதன் தன்மை கெட்டு  போகாமல், அப்படியே இருக்கும்.

 மேலும், பட்டு புடவையில் அழுக்கு, கறை ஏதேனும் இருந்தால், அதனை ட்ரைவாஸ் செய்வது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்