இரு அவைகளிலும் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
பெண்களுக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றுமாறு மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். உலக மகளிர் நாளையொட்டி மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு உறுப்பினர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அம்பிகா சோனி, ரேணுகா சவுத்ரி ஆகியோர் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததைக் குறிப்பிட்டனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்ததை அடுத்து அந்தப் பணிகளை அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதாக ரஜனி பட்டேல், அம்ரிதா பிரீத்தம் ஆகியோர் தெரிவித்தனர். திமுக உறுப்பினர் கனிமொழி பேசும்போது, பெண் கருக்கொலை, ஊட்டச்சத்துக் குறைவு, வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.