போர்களமான லெபனான்…!போராட்டகர்கள்-போலீசார் இடையே கைலப்பு
- லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாடு போர்களமாகி உள்ளது .
- போராட்டர்கர்கள் மற்றும் போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
லெபனானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து உள்ளது.இதனால் நாடு போர்களமாகி உள்ளது.அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார்க்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
எதற்கு இந்த போராட்டம் என்று பார்த்தால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடந்த மாதம் அக்டோபர் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டம் ஆனது அரசுக்கு எதிராக தீவிரமடைந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் சாட் அல் ஹரிரி பதவி விலகினார்.இருந்தப் போதிலும் போராட்டம் அதிதீவிரமடைந்த நிலையில் போராட்டகாரர்கள் அந்நாட்டு தலைநகர் பெய்ரூட்டியில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் ஒன்று கூடி சாலைகளில் டயர்களை எரித்தனர்.இந்நிலையில் போராட்டம் வலுவடைவதை தடுக்க அந்நாட்டு போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசி போராட்டத்தை கலைத்தனர் அப்போது அந்த இடமே ஒரு போர்களம் போல் காட்சி அளித்தது.